டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனை நடத்தம் உயர்மருத்துவ படிப்புக்கான  INI CET Examஐ தள்ளி வைக்கக்கோரி 26 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மருத்துவ உயர்படிப்பான எம்டி. எம்எஸ் படிப்புகளுக்கு  நீட் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவதுபோல,  எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட 11 மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் உயர் மருத்துவக்கல்வி பெற,  நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு  ஐஎன்ஐ-சிஇடி (இனி-செட்) என்ற தனி நுழைவு தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவர்கள் ஓய்வின்றி, மருத்துவமனைகளில் பணியாற்றி வருவதால், தற்போதைய நிலையில், தேர்வை எதிர்கொள்ள முடியாது. அதனால்,  எய்ம்ஸால் நடத்தப்படும் ஐ.என்.ஐ. செட் தேர்வுகளை ஒத்திவைக்க  வேண்டும் என 26 மருத்துவ மாணவர்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அவர்களது மனுவில், தேர்வு குறித்து  19 நாட்களுக்கு முன்புதான் அறிவிப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் பரீட்சைக்கான மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளன அல்லது ஆர்வலர்கள் பணிபுரியும் இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளன, இதனால் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளக்கூடும். தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்வை எதிர்கொள்வது  என்பது பட்டதாரி மருத்துவர்கள் மீது எவ்வாறு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதையும்,  “COVID-19 காரணமாக நிலவும் சூழ்நிலைகளில், இந்த தேர்வை நடத்துவதன் விளைவாக, இந்தியா முழுவதும் உள்ள பட்டதாரி மருத்துவர்கள் 2021 ஜூன் 16 அன்று தேர்வுக்கு அமருமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள். மேலும், பல மருத்துவர்கள் முழுமையாக தடுப்பூசி போடவில்லை மற்றும் பலருக்கு COVID தடுப்பூசியின் முதல் டோஸ் கூட கிடைக்கவில்லை. எனவே, தேர்வை நடத்துவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஏராளமான மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் உள்ளதால் தேர்வை எழுத இயலாது என்றும், தற்போதைய சூழ்நிலையில் தேர்வு நடத்தினால் பல ஆயிரம் பேரின்  உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி விடும், எனவே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.