டெல்லி: உலகை ஆட்டிப்படைத்துவந்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணியுடன் நிறைவடைந்த கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான (1,23,104) கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.  தினசரி பாதிப்பு விகிதம்  0.67% என தெரிவித்து உள்ளது.

நேற்று மேலும் புதிதாக 830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில்,  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21,607 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் 1,771  பேர் குணமடைந்து வீடு திருமியுள்ளனர்.  இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40 கோடியாக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 219.57 கோடி தடுப்பூசி டோஸ்கள் இதுவரை 90.03 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது! விஞ்ஞானிகள் எச்சரிக்கை