டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டஉள்ளனர். 13, 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்புகள் குறித்த தகவ்லகளை வெளியிட்டு உள்ளது.
அதன்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,256 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,89,176ஆக உயர்ந்தது.
நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.20% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி நேற்று மேலும் 68 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,556ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக உள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் 13,528பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,70,913ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.61% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,11,13,94,639 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 31,60,292 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.