சென்னை: அரசு மருத்துவமனைகளில் 2553 தற்காலிக மருத்துவர்கள் பணி  நியமனம் செய்வதற்கான அறிவிப்வை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது,  அரசு  மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 பொது மருத்துவர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பொது மருத்துவர் (General Asst. Surgeon) பணியிடங்களை ரூ. 56,100 – 1,77,500 என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 24 முதல் மே 15ம் தேதி வரை மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.