சென்னை:
யம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். கடந்த டிசம்பர் 26 அன்று முகமது கரிமுல்லா டெல்டா மாறுபாட்டிற்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், மறுநாள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 20 நாட்கள் ஐசியுவில் உயிருக்குப் போராடிய அவர் கோவிட்-19 நிமோனியாவால் இறந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜிவ்காந்தி மருத்துவமனை கிரிட்டிகல் கேர் தலைவர் டாக்டர் டி சுதாரகன் கூறுகையில், நோயாளிக்கு சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் இல்லை,. ஆனால் 110 கிலோ எடையுடன் இருந்தார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நோயாளி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், CPAP வென்டிலேட்டர் மற்றும் அதிக ஓட்டம் கொண்ட நாசி கேனுலாவில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் தடுப்பூசி போடாதவர்கள். ஒருவேளை, இந்த நோயாளி (கரிமுல்லா) குறைந்தபட்சம் ஒரு டோஸ் எடுத்திருந்தால், சிகிச்சையின் போது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர் சுதாகரன் கூறினார்.