மதுரை

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் 25 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது

xpress trains at

நெல்லை-மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை முதல் 21-ந்தேதி வரையில் மதுரை கோட்டத்தில் 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

தூத்துக்குடியிலிருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06847) வரும் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 3.10 மணிக்குப் புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06848) வரும் 12-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது .

நெல்லையிலிருந்து காலை 7.25 மணிக்குத் திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06673) 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து காலை 8.15 மணிக்கு நெல்லை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06674) 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்தாகிறது. 

நெல்லையிலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06675) 11, 15 மற்றும் 17 முதல் 21-ந்தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06676) 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. இதேபோல, நெல்லையிலிருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06677) 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 6.15 மணிக்கு நெல்லை செல்லும் விரைவுவண்டி ரயில் (06678) வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி மற்றும் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. 

நெல்லையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06409) 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06405) 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06679) வரும் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மதியம் 2.10 மணிக்கு வாஞ்சி மணியாச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06680) 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

நெல்லையிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06668) 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், தூத்துக்குடியிலிருந்து மாலை 6.25 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06667) 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. செங்கோட்டையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06684) 15-ந்தேதி மற்றும் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், நெல்லையிலிருந்து காலை 7 மணிக்கு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06684) 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

செங்கோட்டையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06686) 15-ந்தேதி மற்றும் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், நெல்லையிலிருந்து மதியம் 1.50 மணிக்கு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06687) 15-ந்தேதி மற்றும் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மாலை 7.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06641) 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், நெல்லையிலிருந்து காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06642) 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (06012) வரும் 17, 18 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (06011) 16, 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06030) 18-ந்தேதியும், மேட்டுபாளையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06029) 19-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. புனலூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06639) 15-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.”

என்று கூறப்பட்டுள்ளது.