சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26,55,572 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் 194 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுஉள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை 26,55,572 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 26,02,833 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதுபோல, தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி, இதுவரை 35,476 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், தமிழ்நாடு முழுவதும் 17,263 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று புதிதாக 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,48,898 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ள துடன், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,463 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 5,38,336 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 2099 பேர் உள்ளனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 9
செங்கல்பட்டு 119
சென்னை 194
கோவை 198
கடலூர் 44
தர்மபுரி 37
திண்டுக்கல் 12
ஈரோடு 121
கல்லக்குறிச்சி 21
காஞ்சிபுரம் 36
கன்னியாகுமரி 20
கரூர் 20
கிருஷ்ணகிரி 26
மதுரை 25
மயிலாடுதுறை 18
நாகப்பட்டினம் 33
நாமக்கல் 55
நீலகிரி 29
பெரம்பலூர் 10
புதுக்கோட்டை 26
ராமநாதபுரம் 6
ராணிப்பேட்டை 20
சேலம் 69
சிவகங்கை 19
தென்காசி 3
தஞ்சாவூர் 73
தேனி 11
திருப்பத்தூர் 26
திருவள்ளூர் 74
திருவண்ணாமலை 38
திருவாரூர் 68
தூத்துக்குடி 27
திருநெல்வேலி 22
திருப்பூர் 91
திருச்சி 63
வேலூர் 25
விழுப்புரம் 22
விருதுநகர் 14