இந்தியாவில் நேற்று 28,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

டில்லி

ந்தியாவில் நேற்று 28,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,51,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,143 அதிகரித்து மொத்தம் 3,36,51,221 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 258 அதிகரித்து மொத்தம் 4,46,948 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 28,986 பேர் குணமாகி  இதுவரை 3,28,94,762 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,96,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,376 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,41,119 ஆகி உள்ளது  நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,834 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,723 பேர் குணமடைந்து மொத்தம் 63,60,735 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 16,671 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,13,937 ஆகி உள்ளது.  இதில் நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,438 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,242 பேர் குணமடைந்து மொத்தம் 44,23,772 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,65,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 787 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,72,620 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,717 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 775 பேர் குணமடைந்து மொத்தம் 29,21,567 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,307 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,724 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,55,572 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,476 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,635 பேர் குணமடைந்து மொத்தம் 26,02,833 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,263 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,167 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,45,657 ஆகி உள்ளது.  நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,125 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,487 பேர் குணமடைந்து மொத்தம் 20,18,324 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.

More articles

Latest article