24ந்தேதி: காஞ்சிபுரம் வருகிறார் பிரணாப் முகர்ஜி!

Must read

சென்னை,

னாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 24ந்தேதி காஞ்சிபுரம் வருகை தருகிறார். அப்போது காஞ்சி மடத்துக்கு சென்று ஜெயேந்திரரிடம் ஆசி பெறுகிறார்.

வரும் ஜூலை மாதத்துடன் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைகிறது. இந்நிலையில், வரும் 24ந்தேதி திடீரென காஞ்சிபுரம் வருகிறார்.

ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சிபுரத்துக்கு வருகை தரும் பிரணாப் முகர்ஜி அன்றைய தினம் கலை டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள விமான இறங்கு தளத்தில் இறங்குகிறார்.

அங்கிருந்து கார் மூலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்ம்ன் மற்றும் ஏகாம்பரநாதர் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து சங்கரமடம் செல்கிறார். அங்கு சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெறுகிறார். பிறகு மடத்தில் முக்தி அடைந்த மகா பெரியவர் சங்கர சேகரேந்திர சரஸ்வதி சுவாமியின் பிருந்தாவனத்துக்கு சென்று அங்கு தரிசனம் செய்கிறார்.

பின்னர் மாலையில்  ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களில் பிரணாப் கலந்து கொள்கிறார்.

விழா முடிந்ததும்  ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி சவுரிராஜன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article