டெல்லி: அகமதாபாத் நகரில் நடைபெற்ற  ஏர்இந்தியா விமான விபத்தில் 241  பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பதுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்து உள்ளது.

விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள டாடா நிறுவனம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதேபோல் விமானம் விழுந்ததால் சேதமடைந்த BJ மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தை சீரமைத்து தருவதாகவும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த அனைவரின் மருத்துவ செலவையும் ஏற்பதாகவும் டாடா குழுமம் அறிவித்துள்ளது.

“இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் போதுமானதாக வெளிப்படுத்த முடியாது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன,” என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்  வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று (ஜுன் 12ந்தேதி) குஜராத் மாநிலம் அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர்இந்தியா போயிங் 787 ரக விமானம்,  புறப்பட்ட ஒருசில  நிமிடங்களில், அங்குள்ள மருத்துவ கல்லூரி கட்டிடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. அதாவது,  நேற்று  பிற்பகல் 1.38 மணியளவில்  புறப்பட்ட விமானம் சுமார் 825 அடி உயரத்தைம் எட்டிய நிலையில், திடீரென அடுத்த ஓரிரு நிமிடங்களில்  கட்டிடங்கள் மீது விழுந்து  மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த விமானத்தில்,  230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேர் பயணித்த  நிலையில், முன்னாள் மாநில முதல்வர் விஜய்ரூபானி உள்பட  241 பேர் உயிரிழந்துள்ளனர்.   ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.  விபத்துக்குள்ளான விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கலை சேர்ந்தவர்கள்.  இவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் இருந்துள்ளனர். பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.

விமானமானது  புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து, மேகனி நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்துசிதறியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் உடன் காவல்துறையினரும் இணைந்து உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் விபத்தில் உயிரிழந்த  பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  விபத்துக்கு ஆளானவர்களை அடையாளம் காண, அவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் அகமதாபத் மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விமான விபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விமானித் தளபதி கேப்டன் சுமீத் சபர்வால் மேடே அழைப்பை அனுப்பிய சில வினாடிகளுக்குப் பிறகு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில்,  அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி இழப்பீடு வழங்குவதாக விமான நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

“இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் போதுமானதாக வெளிப்படுத்த முடியாது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன,” என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்  வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ₹1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஈடுகட்டுவோம், மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வோம். கூடுதலாக, பி.ஜே. மருத்துவ விடுதியைக் கட்டியெழுப்புவதில் நாங்கள் ஆதரவை வழங்குவோம். இந்த கற்பனை செய்ய முடியாத நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கேம்பல் வில்சன் ஒரு வீடியோ அறிக்கையில் இந்த உணர்வை எதிரொலித்தார். “இந்தியாவில் உள்ள நம் அனைவருக்கும் இது ஒரு கடினமான நாள். மேலும் இது இப்போது எங்கள் பயணிகள், குழு உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் முழுமையாக கவனம் செலுத்தினால். பல கேள்விகள் இருப்பதை நான் அறிவேன், இந்த கட்டத்தில், நான் அனைத்திற்கும் பதிலளிக்க முடியாது.”

ஹெல்ப்லைன் எண்ணை (1-800-56-91-44) அறிவித்த வில்சன், “மக்கள் தகவலுக்காக ஆர்வமாக உள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களால் முடிந்தவரை துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் தெரிவிக்கும் எதுவும் துல்லியமாக இருக்க வேண்டும், ஊகமாக இருக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இப்போதைக்கு, பயணிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் புலனாய்வாளர்களை ஆதரிக்க எங்கள் குழுக்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன.”

அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படும் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சில மணி நேரம் விமான நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டு மாலை 4.04 மணிக்கு மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டது.

“ஏர் இந்தியா விமானம் 171 இன் துயரச் சம்பவத்தால் நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். நினைத்துப் பார்க்க முடியாத இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் இரங்கல் தெரிவிக்கின்றன. நாங்கள் அனைத்து அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம், மேலும் களத்தில் உள்ள குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம், ”என்று அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி X இல் பதிவிட்டுள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளான வீடியோ: (அகமதாபாத் விமான நிலையம்)

அகமதாபாத் விமான விபத்து – மாலை 4மணி வரை 110 பேரின் உடல்கள் மீட்பு – அவசர கால உதவி எண் அறிவிப்பு