நியூயார்க்:

லக வல்லரசான அமெரிக்கா, இன்று கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல், தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது வருத்தத்திற்குரிய மற்றும் வெட்கப்பட வேண்டிய  விஷயம் என்று விமர்சிக்கப்படுகிறது.

சீனாவில் இருந்து பரவிய கொரேனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஜாதி, மதம், இனம், நாடு  பார்க்காமல் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் கொரோனா, உலக வல்லரசான அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது.

தனது பராகிராமங்களை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்தியு,  மிரட்டியும் வரும் அமெரிக்கா, தற்போது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசிடம் மண்டியிட்டு உள்ளது. சீனா வைரஸ் என்று பெயரிட்டு, அந்த நாட்டை இழிவுபடுத்திய டிரம்ப் தற்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல்  தவித்து வருகிறார்.

கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்கள் நாடாக சீனா இருந்த நிலையில், தற்போது, சீனாவை முந்தி அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவிய சீனாவில், இது வரை 81, 285 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அங்கு 3,287 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் மொத்தம் இதுவரை 80,600 பாதிக்கப்பட்ட நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், அதாவது 8,215 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 13,700 பேருக்கும் கொரோனா தொற்றியது. இதனால் அங்கு மொத்தம் 82,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா- 85,000 பேருக்கு பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 237 பேர் பலி உள்ளதாகவும்,  ஒரே நாளில் 16,000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.