மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236 பேரை பணி நீக்கம் செய்ய பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகார் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகள் ரத்து செய்தும் பால்வளத்துறை ஆணையர் உத்தரவு
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்,. முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பல இடங்களில் பலமுறை ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக பல வழக்குகளும் நடைபெற்று வருகிறது. அதுபோல அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதும் பல வழக்குகள் உள்ளன. அவரது தலைமையின் கீழ் உள்ள பால்வளத்துறையில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது.
மதுரை ஆவினில் 2020, 2021-ம் ஆண்டுகளில் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன. பல பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் ஊழல் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து திமுக அரசு பதவி ஏற்றதும், விசாரணை நடத்தியது. இதில், மதுரை ஆவினில் மட்டும் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முறைகேடாக பணியில் சேர்ந்த மேலாளர் உள்பட 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகள் ரத்து செய்தும் பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.