சென்னை: தமிழக நீர்வளத்துறையில் 235 உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இது அதிகாரி களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு மீது சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஒரே நாளில்  50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது, நீர்வளத்துறையில் பணியாற்றி வந்த  235 உதவி பொறியாளர் பணியிட மாற்றம் செய்தும், சிலருக்கு பணி உயர்வும் வழங்கி  தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரு நாட்களாக காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் வருகை தந்து, மேட்டூர், கல்லணை உள்பட டெல்டா பாசன பகுதிகளை ஆய்வு செய்த நிலையில், இந்த பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.