டெல்லி:
இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள், 279 தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2017-18ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இருந்து 8 மாநிலங்களில் உள்ள இந்த 23 பல்கலைக்கழகங்களை நீக்கி பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப குழு (ஏஐசிடிஇ) உத்தரவிட்டுள்ளது.

1956ம் ஆண்டு யுஜிசி சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக இந்த பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வந்துள்ளது. இந்த 23ல் 9 பல்கலைக்கழகங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை உரிய அனுமதி இல்லாமல் உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறது.

7 பல்கலைக்கழகங்கள் டெல்லியிலும், 2 மேற்கு வங்கத்திலும், ஒடிசாவில் 2ம் செயல்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் பல போலி தொழில்நுட்ப மையங்கள் செயல்பட்டு வருகிறது. மாணவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் இது குறித்த பொது அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி ஒழுங்ககம் வெளியிட்டுள்ளது.

இது போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்று செய்தி தாள்களில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.போலி பல்கலைக்கழகங்கள், போலி தொழில்நுட்ப கல்வி மையங்களின் விபரம் யுஜிச, ஏஐசிடிஇ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. போலிகளின் விபரம்….

பீகார்

# மைதிலி பல்கலைக்கழகம்/விஸ்வவித்யாலா, தர்பங்க நகர் பீகார்.

டெல்லி..

# செவன் அவுட் ஆப் கமர்சியல் பல்கலைக்கழக நிறுவனம், தார்யாகஞ்ஜ், டெல்லி.

# யுனைடெல் நேஷன்ஸ் பல்லைக்கழகம், டெல்லி.

# வொக்கேஷனல் பல்கலைக்கழகம், டெல்லி.

# ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிசியல் பல்கலைக்கழகம், ஏடிஆர் ஹவுஸ்ல 8ஜே, கோபாலா டவர், 25 ராஜேந்திரா பிளேஸ், புதுடெல்லி 110 008.

# இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், புதுடெல்லி.

# சுய தொழில்களுக்கான விஸ்வகர்மா திறந்த நிலை பல்கலைக்கழகம், ரோஸ்கர் ஸ்வெஸ்தான், 672 சஞ்சய் என்கிளேவ், டெல்லி 110 033.

கர்நாடகா

# பதகன்வி சர்கார் வேர்டு ஓப்பன் யுனிவர்சிட்ட எஜூகேஷன் சொசைட்டி, கோகாக், பெல்காம், கர்நாடகா.

கேரளா

# செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளா.

மகாராஷ்டிரா

# ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாக்பூர், மகாராஷ்டிரா.

மேற்கு வங்கம்

# இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆட் ஆல்டர்நெடிவ் மெடிசின், கொல்கத்தா.

# இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின் மற்றும் ரிசர்ச், 8ஏ டைமண்ட் ஹார்பர் ரோடு, பில்டெக், இரண்டாவது தளம், தாகூர்புர்கூர், கொல்கத்தா 700 063.

உத்தர பிரதேசம்

# வாரனாசேயா சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, வாரனாசி (உ.பி.), ஜகத்புரி, டெல்லி.

# மகிளா கிராம் வித்யாபதி/விஸ்வவித்யாலயா (மகளிர் பல்லைக்கழகம்) பிரயாக், அலகாபாத், உ.பி.

# காந்தி இந்தி வித்யாபித், பிரயாக், அலகாபாத், உ.பி.

# நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர், உ.பி.

# நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திறந்த நிலை பல்கலைக்கழகம், அசல்டல், அலிகார், உ.பி.

# உ.பி. விஸ்வவித்யாலயா, கோசிகலன், மதுரா, உபி.

# மகரான பிரதாப் சிக்ஷ நிகேதன் விஸ்வவித்யாலயா, பிரதாப்கர், உபி.

# இந்திரபிரசாத சிக்ஷ பரிசத், இன்ஸ்டிடிசனல் ஏரியா, கோடா, மகான்பூர், நொய்டா, பேஸ் 2, உ.பி.

# குருகுல் விஸ்வவித்யாலயா, வ்ரிதன்வன், உ.பி.

ஒடிசா

# நபாபாரத் சிக்ஷா பரிசத், அனுபூர்ணா பவன், பனிதங்கி ரோடு, சக்திநகர், ருர்கேலா 769 014.

# வடக்கு ஒரிசா விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஒடிசா.