டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,06,40,544  ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தொடர்கிறது.

‘இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.  தற்போது, நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்க தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இருந்தாலும், பொதுமக்கள் முகக்கவசம், சமுக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும கடந்த 24 மணிநேரத்தில் 14.321  பேருக்கு பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை1,06,40,544   ஆக உயர்நதுள்ளது.  தற்போதைய நிலையில்  1,82,831  பேர்  சிகிச்சையில்  உள்ளனர்.

அதுபோல கடந்த 24 மணி நேரத்தில்  153  பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,53,221 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில்  நோய் தொற்று பாதிப்பில் இருந்து 17,166 பேர் விடுபட்ட நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை விடுபட்டோர் எண்ணிக்கை 1,82,831 ஆக உயர்நதுள்ளது.

இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிராக தொடர்ந்து வருகிறது. 2வது இடத்தல் கர்நாடக மாநிலமும், 3வது இடத்தில் ஆந்திரா, 4வது இடத்தில் கேரளா, 5வது இடத்தில் தமிழகமும் இருந்து வருகிறது.