ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்படுத்த  முடியாத நிலையில் தொடர்கிறது. தற்போது உருமாறிய வகையில் மீண்டும பரவி வருகிறது.  இதை  கட்டுப்படுத்த  உலக நாடுகள் போராடி வருகின்றன. தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9,87,42,691 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  தொற்று பாதிப்பு காரணமாக, 21,16,319 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,09,17,439  பேர்   குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியை 57 லட்சத்து 09 ஆயிரத்து 254 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 239 பேர்  கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது. அங்கு 25,390,042  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு   10,640,544  பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3வது இடத்தில் பிரேசில் தொடர்ந்து வருகிறது. அங்கு  8,755,133  பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.