ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 243,241,736 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,865,679 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை எட்டிய போதிலும், இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்து.. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளிலும் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள தபோதைய நிலையில், தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள் முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 243,241,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,944,691 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 220,431,366 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 17,865,679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,788,910 (99.6%) பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 76,769 (0.4%) பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன