டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று மட்டம் புதிதாக மேலும் 21,566 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 185 ஆக உயர்ந்தது.
கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் சேர்த்து மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,870 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.
நேற்று ஒரே நாளில் 18,294 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,50,434 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.46% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 1,48,881 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.34% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,00,91,91,969 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 29,12,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]