சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  திமுக தேர்தல் அறிக்கை  தயாரிப்பு குழு, திமுக எம்.பி.  கனிமொழி தலைமையில் கூடியது. இதில் தேர்தல் அறிக்கை, அதில் இடம்பெற வேண்டிய ஷரத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவை திமுக தலைமை கடநத வாரம் அறிவித்தது. அதன்படி, கடந்த தேர்தலில்போது தேர்தல் அறிக்கை தயாரித்தத கட்சியின்  துணைப் பொதுச் செயலா் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்

இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சா்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]