2021, 2022 ஆகிய உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதற்கு முந்தைய போட்டி தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகளுடன் புதிதாக நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 12 அணிகள் கொண்ட சூப்பர் 12 சுற்றுடன் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டது.
துகுதிச் சுற்றில் தேர்வான நான்கு அணிகளுடன் முந்தைய தொடரில் 9 முதல் 12வது இடத்தைப் பிடித்த நான்கு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டது. இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மொத்தம் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தது.
2024 உலகக்கோப்பை போட்டிகள் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் கூட்டாக நடத்த உள்ளதை அடுத்து இவ்விரு அணிகளும் 2024 சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மற்ற அணிகளை தேர்வும் செய்யும் நடைமுறையில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. அறிவித்துள்ள இந்த புதிய நடைமுறையில் முதல் சுற்றில் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா-வில் சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இரு குழுவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்த 8 அணிகள் தவிர தகுதி மற்றும் திறன் அடிப்படையில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் 2024 உலகக்கோப்பை முதல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள எட்டு அணிகள் மண்டல அளவிலான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இதில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தலா 2 அணிகளும் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து தலா ஒரு அணியும் தேர்வு செய்யப்பட உள்ளது.
மொத்தம் 20 அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த முதல் சுற்றில் நான்கு குழுக்களில் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்த எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கு இடையே ‘சூப்பர் 8’ சுற்று நடைபெறும் இதில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் தவிர நியூஸிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து ஆகிய எட்டு அணிகளுடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 12 அணிகள் 2024 முதல் சுற்றில் விளையாட நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
மீதமுள்ள எட்டு அணிகள் அணிகள் மண்டல வாரியாக நடைபெறும் தகுதிச் சுற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது இதில் ஜிம்பாப்வே அணியும் ஆப்பிரிக்க அணிகளுடனான தகுதிச் சுற்றில் கலந்து கொள்ள இருக்கிறது.