ஜூலை 26ம் தேதி துவங்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது.

இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் போட்டிக்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

கிரீஸ் நாட்டில் உள்ள பழமைவாய்ந்த ஒலிம்பியா நகரில் அதற்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது.

இந்த ஒலிம்பிக் ஜோதி கிரீஸ் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மார்ஸெல்லே நகரை சென்றடையும்.

அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் இந்த ஜோதி ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது அரங்கில் ஏற்றப்படும்.

ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து ஒலிம்பிக் போட்டியில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவகையில் பிரான்ஸ் அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.