2019 பொதுத்தேர்தல்: காங்கிரசில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர்!

Must read

 
பீகார்:
ரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து பீகார் காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காங்கிரசில் உள்கட்சி குழப்பங்களை மறந்து, வரும்  2019 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை மட்டுமே அறிவிக்க வேண்டும்.  அறிவிக்கப்படுவார் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களின் உள்ளத்திலும் உள்ள நம்பிக்கையாகும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் ஒரே பிரதம வேட்பாளர் ராகுல்காந்தி மட்டும்தான். மதச்சார்பற்ற பார்வையை கொண்டுள்ள நிதிஷ்குமார், லாலு பிரசாத் போன்ற தலைவர்கள் அடங்கிய அணியை ராகுல் காந்தி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.` என தெரிவித்துள்ளார்.
பீகார் காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி அம்மாநில கல்வித்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article