மேஷ ராசி

mesham

இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு வந்து சேரும்.

5-க்குரிய சூரியன்,9-ஆம் இடத்தில் உள்ளார். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 12-ஆம் இடத்தில் உள்ள கேது, தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியத்தை தருவார். 6-இல் இராகு இருப்பதால், கடன் பிரச்னை சற்று குறையும். 10-ஆம் இடத்தில் உள்ள புதன், தடைபட்ட கல்வியை தொடரச் செய்யும்.

புதிய தொழில் துவங்குவீர்கள். தளர்ந்த தொழில் புத்துயிர் பெறும். அஷ்டம சனியாக இருப்பதால், ஜாமீன் கையெழுத்து, கூட்டாளி விஷயங்களில் கவனம் தேவை. ஸ்ரீதுர்கா தேவி அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை பொங்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஸ்ரீதுர்கை அம்மனுக்கு, செவ்வாய் கிழமையில் எழுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அத்துடன், மாதத்தில் ஒரு செவ்வாய்கிழமை இராகுகாலத்தில் ஸ்ரீதுர்கைக்கு எழுமிச்சை மாலை அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்த காற்று வீசும்.

  • ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்