2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள்
சிறந்த நடிகராக துல்கர் சல்மானும் (சார்லி), சிறந்த நடிகையாக பார்வதியும் (என்னு நிண்டே மொய்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சார்லி படத்தின் இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக சணல்குமார் சசிதரன் இயக்கிய ஒளிவு திவசத்தே களி தேர்வாகியுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது ரமேஷ் நாராயணுக்குக் கிடைத்துள்ளது.
சார்லி, நிண்டே மொய்தீன் ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெற்றுள்ளன.
நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் ‘நேரம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மலையாளப் படம் – பிரேமம். ஆனால் இதற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால், சமூகவலைத்தளத்தில் பலரும் வருத்தத்துடன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்கள்.