சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரிலேயாவின் CSIRO’s Data6 என்ற நிறுவனமும் இணைந்து 10 லட்சம் செயலிகளை ஆராய்ந்ததில் 2000 நச்சுநிரல்கள் கொண்ட செயலிகளும் இருப்பதாக அவர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இரண்டு வருடமாக நடைப்பெற்ற ஆய்வில் 2000 நச்சு நிரல்கள் மிக அதிகமாக விளையாட்டு செயலிகளில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்

The story noted that besides the impersonated apps the Google Play Store also includes several fake apps that despite being malware free requests “dangerous data access permissions”. The study also noted, “Games Temple Run, Free Flow and Hill Climb Racing were among the most commonly counterfeited.”

இந்த செயலிகள் நம்மிடம் இருந்து தகவல்களை  நம்மை அறியாமல் பெறும்  வசதிகளுடன் உள்ளது குறிப்பாக மிக பிரபலமான செயலிகளான  Temple Run, Free Flow and Hill Climb Racing போன்றவற்றிலும் உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது

நியூரல் நெட்வோர்க் இணைந்து இயந்திர கற்றல் ( machine learning neural networks)  மூலம் கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை ஆராய்ந்த போது அதில் 10,000 பிரபலமான செயலிகள்  ஒரே மாதிரியான படங்கள் மற்றும் திருடப்பட்ட செயலி விளக்கங்களுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

கூகிள் நிறுவனமும் மாதந்தோறும் பல்வேறு வகையான செயலிகளை கண்டறிந்து நீக்கினாலும் இன்னமும் செயலிகள் சேர்க்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மேலும் நச்சு நிரல்களை இயக்கும் மற்றும் நமக்கு தெரியாமல் தகவல்களை எடுக்கும் செயலிகளை தடை செய்வது 66% கூடியுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது

பத்திரிக்கை.காம் எந்த செயலியை நிறுவினாலும் அதில் உள்ள பர்மிசன் எனப்படும் செயலிகள் உங்கள் செல்பேசியில் எடுக்கும் அனுமதியை ஒரு முறை சரிபார்த்து செயல்படுங்கள்

-செல்வமுரளி