சென்னை:  எண்ணூர் கடல் பகுதியில் இருந்து இதுவரை  200 டன்திடக்கழிவுகள், 20 ஆயிரம் லிட்டர்அளவு எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், முகத்துவாரத்தில் மணலை மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாகவுமை சென்னை  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதிகயில் சிபிசில் நிறுவத்தின் கச்சா எண்ணை வெளியேறி  பாதிக்கப்பட்ட நிலையில், அந்த  பகுதிகளில்  ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலந்த எண்ணெய்படலத்தை அகற்றுவது குறித்து மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருகிறது. அதேபோல மாநகராட்சி ஆணையர்தலைமையில் துறைகள் சார்ந்தமாவட்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  இதுவரை எண்ணூரில் 200 டன்திடக்கழிவுகள், 20 ஆயிரம் லிட்டர்அளவு எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுகாதார சீர்கேட்டைதடுக்கும் வகையில் இந்த பகுதிகளில் மொத்தம் 400 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் குறிப்பாக சுவாச நோய்,தோல் நோய், கண் நோய்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணலை முழுவதும் மாற்றவும் நீர்வள ஆதாரத் துறையுடன் இணைந்துதிட்டமிடப்பட்டு, சுற்றுப்புறச் சூழல்அங்கீகாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணிக்கு காலக்கெடுஎன்பதை நிர்ணயிக்க முடியாது. எண்ணெய் முழுவதும் அகற்றிவிட்டால் கூட, அந்த பகுதிகளில் உயிரினங்களையும் மீண்டும் கொண்டுவருவதற்கு காலம் எடுக்கும். இதற்காக அனைத்து தரப்பு வல்லுநர்களிடம் இருந்து கருத்துகளை பெறவேண்டியது அவசியம். அதனடிப்படையில் வழிகாட்டுதல்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு கூறினார்.