சென்னை
அசோக் நகரில் ஒரு பிரபல நடிகர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் ஒரு பிரபல நடிகர் தனது அறக்கட்டளையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்காக இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 30க்கும் அதிகமானோர் தங்கி வருகின்றனர். இவர்களுக்குச் சமையல் செய்யும் பெண்மணி அருகில் உள்ள ஒரு தெருவில் வசித்து வருகிறார்.
அந்த தெருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி கட்டுப்படுத்தபபட்ட பகுதியாக அறிவிக்கபட்டுளது. அந்த தெருவில் வசிக்கும் சமையல் பெண்மணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அது இந்த இல்லத்தில் வசிப்போருக்குப் பரவி உள்ளது
இவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இல்லத்தில் உள்ளவர்கள் லயோலா கல்லூரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கொரோனா உறுதி ஆனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர். மற்றவர்கள்,சென்னை மாநகராட்சியின் தனிமைப்படுத்தும் முகாமளுக்கு அனுப்பப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]