ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.22  கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 49லட்சத்தை கடந்துள்ளது.

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும் தொடர்ந்து வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.  கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே சிறந்த கவசமாக கருதப்படுகிறது.  இதனால் மக்களுக்கு  தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள்  முழு வீச்சில்  செயல்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 242,292,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 49,28,043 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 219,630,592 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போதைய நிலையில்  17,733,467 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,655,319 (99.6%)  பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 78,148 (0.4%) பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.