டெல்லி,

உலகின் 100 தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் மெட்ராஸ் ஐஐடி, வேல்டெக் பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன,

உலகளவில் தரத்திலும், கட்டுமானத்திலும் சிறந்து விளங்கும் டைம்ஸ் ஹையர் எஜூகேசன் என்ற கல்வி இதழ் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து நடத்தி அவற்றின் கல்வி, ஆய்வு படிப்பு, உள்கட்டுமானம், தோற்றப்பொலிவு, மாணவர்கள் கற்பதற்கான சூழல்  ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை  அட்டவணைப்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் இந்தாண்டு, இந்தியாவைச் சேர்ந்த 7 பல்கலைக் கழகங்கள் உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில்  இடம் பிடித்துள்ளன.

இவற்றில் இரண்டு தமிழகத்தைச் சேர்ந்தவையாகும். சென்னை ஆவடியில் இருக்கும் வேல்டெக் பல்கலைக்கழகம் 43 ம் இடத்திலும், மெட்ராஸ் ஐஐடி 62 ஆவது இடத்திலும் உள்ளன. இவை இரண்டும் முந்தைய ஆண்டுகளை விட கல்வித்தரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.