சென்னை:
பி
ளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் என்று  அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (04/06/2021) மாலை 04.00 மணிக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பிளஸ் 2 பொதுத்தேர்வு பற்றி சட்டமன்றக் கட்சிப் பிரதிநிதிகளுடன் நாளை (05/06/2021) காணொளி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்பட உள்ளது. அனைத்து தரப்பு கருத்துகளின் அடிப்படையில் முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார். பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.