ஈரோடு
ஈரோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது மேலும் 2 வழக்குகல் பதியப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது. அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் மீது ஈரோடு டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் மாலை கருங்கல்பாளையம் ஜீவாநகரில் வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சி நிர்வாகிகளுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த போது அவர்கள் உரிய அனுமதி பெறாமல் விதிமுறையை மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பறக்கும் படை அதிகாரி நவீன்குமார் ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சியினருடன் பிரசாரம் செய்த போதுஅனுமதியின்றி பிரசாரம் செய்ததாக சீதாலட்சுமி உள்பட 4 பேர் மீது வீரப்பன்சத்திரம் கவல்துறையின் வழக்குப் பதிந்துள்ளனர்.