சென்னை: தேர்தல் முடிவு வெளியான பிறகு ஜூன் மாதத்தில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி ஏராளமானோர் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பத்தி உள்ளனர். புதிய ரேஷன் அட்டை கேட்டு www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும், பலர் நேரடியாகவும் விண்ணப்பித்து உள்ளனர்.
நாடு முழுவதும் 5 வகை ரேசன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. .இதில் PHH – AAY கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் தரப்படுகிறது. இதில் PHH ரேஷன் கார்டுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தருகிறர்கள். NPHH கார்டுதாரர்களுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH – s என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். ஆனால், அரிசி வழங்கப்படாது. ஆனால் NPHH – Nc என்று ரேஷன் அட்டையில் குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும். ரேஷன் கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது
தற்போது ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், பலர் புதிதாக ரேசன் கார்டுகள் வேண்டி அப்ளை செய்துள்ளனர். மேலும், புதிதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் தனியாக பிரித்து புதிய கார்டு வாங்க சரியான ஆவணங்களை (திருமண பதிவு சான்று அல்லது பிற சான்றுகள்) கொடுத்து விண்ணப்பபித்து உள்ளனர். இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட முடியாத நிலை உள்ளது. இதனால் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேசன் கார்டு வழங்க முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய ணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் அவர்களுக்கு புதிய கார்டு வழங்கும் பணி தேர்தல் நடைமுறை முடிந்த பிறகு, ஜஜூன் 2வது வாரத்தில் தொடங்கும் என தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன.இவற்றிற்கு உணவு பொருட்கள் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. இதனிடையே கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியானது நிறுத்தப்பட்டது என்றவர், மீண்டும் ஜுனில் புதிய கார்டுகள் வழங்கப்படும் பணி தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
தற்போது, தமிழ்நாடு அரசு, “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றபின் புதிதாக 2 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.