வாஷிங்டன்

ஆன்லைன் மூலம் ரூ.10 கோடி மோசடி செய்த இந்தியர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம்41 மாதம் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

 அமெரிக்க காவல்துறையினருக்கு அங்குள்ள வயதானவர்களைக் குறிவைத்து அரசு நிறுவனங்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகள் மூலம் ஆன்லைன் வழியாக பணமோசடி நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. அவற்றின் அடிப்படையில் சைபர்-கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையின் முடிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க நீதிமன்றத்தில் அருஷோபிகே மித்ரா (வயது 29) மற்றும் கர்பிதா மித்ரா(வயது 25) ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.

தாம் எப்.பி.ஐ, அமலாக்கத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் போலப் பேசி முதியோரை ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளதையும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.10 கோடிவரை சட்டவிரோதமாக பெற்று ஏமாற்றியதை நீதிபதி முன்பாக ஒப்புக்கொண்டனர்.

எனவே அவர்கள் 2 பேருக்கும் 41 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.