சென்னை: தமிழ்நாட்டில் 2ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் மாற்றங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் இரு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பதவி வகித்து வரும் அலர்மேல்மங்கை ஐஏஎஸ், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், வணிகவரித்துறையின் இணை ஆணையராகப் பதவி வகித்து வரும் ஷங்கர் லால் குமாவத் ஐஏஎஸ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]