சென்னை
இன்று 2 மாவட்டச் செயலாளர்களை மாற்றியதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் குன்னம் ராஜேந்திரன் அவர்கள், தனது உடல்நிலை காரணமாகத் தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டதால் வீ ஜெகதீசன் அவர்கள் அப்பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்
சென்ன வடக்கு மாவட்ட கழக செயலாளராகப் பணியாற்றி வரும் த. இளைய அருணா அவர்களை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து ஆர் டி சேகர் அவர்கள் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel