குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து விமானநிலையத்தில் இரு விமானங்கள் மோதியதில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தின் கிழக்கு முனையில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அது அங்குத் தரையிறங்க வந்த மற்றொரு விமானம் மீது மோதியது.

இதைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தவிர 2 பேருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்புப் படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.