காவிட்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு வீரர்கள் மரணம் அடைந்துள்ள்னர். 

நேற்று பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்றன. இதையொட்டி சாங்கி விமான நிலையத்தில் இருந்து கடற்படைத் தளத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.

புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததனால் நிலைதடுமாறி கேவிட் சிட்டியில் உள்ள ஒரு சந்தைப்பகுதி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

பொதுமக்கள் ஹெலிகாப்டர் கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இதையொட்டி ராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.