டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) ஜம்முவிற்கு செல்கிறார். அங்கு 2 நாள் முகாமிடும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார், முதலில் ப மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்க செல்கிறார். இதுகுறித்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராமன் பல்லா தெரிவித்து உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். 2 நாட்கள் அங்கு முகாமிடும் அவர், இன்று முதலில் காட்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக்கோவிலில் சென்று வழிபடுகிறார். அதன்பின்னரே அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கட்சி தலைவர்கள், தொண்டர் களுடனும் உரையாடும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ராகுல் வருகையையொட்டி காவல்துறையினர் பாதுகாப்புகளை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் கட்சியினரும் சிறப்பான வரவேற்பு கொடுக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராமன் பல்லா. ராகுலின் ஜம்மு வருகை, கட்சியினருக்கு ஊக்கத்தையும், மன உறுதியையும் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், ஏற்கனவே கடந்த மாதம் ஜம்மு வந்திருந்தபோது, காஷ்மீர் பள்ளத்தாக்கை பார்வையிட்டார். தற்போது மீண்டும் வருகை தருவது காஷ்மீரில் காவி கட்சியை வலுப்படுத்தும். ஜம்மு -காஷ்மீரில் ராகுல் காந்திக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. என்று கூறினார்.