கவுகாத்தி: அசாமில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,  42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அசாமில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில், சுமார் 120 பேர்களை ஏற்றிச்சென்ற படகு, அருகே வந்த மற்றொரு படகுடன் மோடி விபத்துக்குள்ளாது. இந்த விபத்து, ஜோராட் மாவட்டத்தில் உள்ள  நிமடி காட் என்ற படகு குழாமில் நடைபெற்றது. விபத்துக்குள்ளான படகின் பெயர் மா-கமலா என்று கூறப்படுகிறது.

படகு கவிழ்ந்ததால், அதில் பயணம் செய்த 120 பேரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதில் சிலர் நீந்தி கரைக்கு வந்தனர். இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் விரைந்து வந்து தண்ணீருக்குள் மூழ்க்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிக்கு ராணுவமும் வரழைக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் ஒரு பெண் ஆசிரியை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 42 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படகில் ஏற்றப்பட்டிருந்த ஆட்டோ, இருச்சகர வாகனங்கள், கார்கள் போன்றவையும் ஆற்றில் மூழ்கின. அதையும் மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.

விபத்து குறித்து தகவல் அறிந்த அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, பணியில் அலட்சியம் காட்டியதாக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.