சென்னை

டந்த 2021 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் 2,53,03,383 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கச் சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.   தற்போது அது மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது.  விரைவில் சென்னை நகர் முழுவதும் மெட்ரோ ரயில் சேவை அளிக்கத் தேவையான பணிகள் நடந்து வருகிறது.   மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை மிகவும் அவசியமாக உள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 2,80,52,367 பேர் பயணம் செய்துள்ளனர்.  அது அதிகரித்துக் கடந்த 2019 ஆம் ஆண்டில் 3,28,13,628 பேர் பயணம் செய்தனர்.  ஆனால் 2020 ஆம் வருடம் பொது முடக்கம் காரணமாக அது குறைந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை பொது முடக்கம் என்பதால் அந்த ஆண்டு 1,18,56,982 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.   பிறகு 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை 2 ஆம் அலை கொரோனா பரவல் காரணமாகச் சேவை நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு 2,53,03,383 பேர் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.