சென்னை :
நடிகர் விமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ. 2.15 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது.
ஜி.கே. ஸ்டுடியோ படத்தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கணேசன் புகார் அளித்துள்ளார்.
தமக்கு தர வேண்டிய ரூ. 2.15 கோடியை தராமல் ‘மன்னர் வகையறா’ படத்தை வெளியிட முயற்சிக்கிறார் என்று விமல் மீது கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இன்று திரையிடப்படுவதாக இருந்த மன்னர் வகையறா பத்திரிகையாளர் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது