ஹாலிவுட்டில் 2.0 பலூன்!

Must read

ரஜினி நடித்து வெளிவர இருக்கும் ‘2.0’ திரைப்படத்தை விளம்பரப்படுத்த 100 அடி உயர பலூன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பறக்க விடப்பட்டது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்பட்டது.

‘2.0’ விளம்பரங்கள் அடங்கிய 100 அடி உயர வெப்பக் காற்று பலூன் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் லேக் பார்க்கில் நடைபெற்றது. இதில் ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தலைமை செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம் கலந்து கொண்டார்.

இதே பலூன் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேல் பறக்க இருக்கிறது. . இந்தியாவிலும் பல்வேறு நகரங்களுக்கு இந்த பலூனைக் கொண்டு வர தயாரிப்பளர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

இந்த பலூனில் பிரபல நட்சத்திரங்கள் பறக்க இருக்கிறார்கள். வரும் 2018 ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக விளம்பரப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்க

More articles

Latest article