சென்னை: 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம்.  தேர்வு நாட்களில், தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வ;நதால் போதும் என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்றுமுதல் 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கி உள்ளது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக, குழந்தைகள் கடுமையாக சிரமப்படுகின்றன. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் தமிழகஅரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.