டில்லி:

ரு பெண்னை மற்றொரு பெண் கற்பழித்ததாக எழுந்த புகாரின் பேரில் சமீபத்தில் ஓரிணச்சேர்க்கைக்கு எதிரான  சட்டத்தில் 19வயதுடைய மற்றொரு இளம்பெண் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவம், இந்தியாவிலேயே  முதல்முறை என்று கூறப்படுகிறது.

வீட்டு வேலைக்கு வந்த வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை, 3 ஆண்களுடன் சேர்ந்து ஒரு பெண் பாலியல் தொடர்பான பொம்மைகளை கொண்டு வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்ட பெண்  ஐபிசி பிரிவு 377-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், தன்மீது பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த அந்த பெண்ணுடன் இருந்த  3 ஆண்களுக் கும் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி நாள் ஓரின சேர்க்கைக்கு (LGBT) எதிரான சட்டப்பிரிவு 377-ஐ  நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியது.

இதனையடுத்து இந்த சட்ட பிரிவினை கொண்டு, டெல்லி கூட்டு பலாத்கார சம்பவத்தில் தன்னை பலவந்தம் செய்த பெண்ணுக்கு பாதிக்கப்பட்ட பெண்  தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். தற்போது அந்த டில்லி இளம்பெண் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.