டெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து மத்தியஅரசு அறிவித்துள்ளத்தை தொடர்ந்து, இன்று  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைத்து அறிவித்து உள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது.  19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதி விலையேற்றத்தின் காரணமாக, ரூ. 1118.50 காசா ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதுபோல வணிக பயன்பாட்டுக்கான 19கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.1,852.50 என விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை குறைக்க ஒப்புதல் பெறப்பட்டது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,  சமையல் கேஸ் சிலிண்டர் மானிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து சிலிண்டர் விலையை மத்தியஅரசு குறைத்துள்ளது.

கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை குறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.  அதன்படி வீட்ட உபயோக சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின்கீழ் சிலிண்டர் பெற்றவர்களுக்கு ரூ.400 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.