டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

பொதுவாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும்.  அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத் தொடா் தொடங்கும் தேதியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

அதன்படி,  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந்தேதி (ஜூலை) தொடங்கி ஆகஸ்ட் 13-ந்தேதி வரை 19 நாட்கள் நடைபெறும் என என தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வருகை தரும் அனைத்து எம்.பி.க்களும் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  நாடாளுமன்றத்துக்கு செய்தி சேகரிக்க வரும் செய்தியாளா்களுக்கும் மக்களவைச் செயலகம் சாா்பில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.