வாஷிங்டன் :

மோடி பிரதமராக பதவி ஏற்றதும், ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் ஜன்தன் யோஜனா என்று வங்கி கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டம் வெற்றியடைந்தாக அறிவித்த போதிலும், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாமல் 19 கோடி பேர் இருப்பதாக உலக வங்கி  ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில், வங்கி கணக்கு இல்லாதோர் குறித்து ஆய்வு செய்த உலக வங்கி அதுகுறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  உலகில் வங்கி கணக்கு இல்லாத 11 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாக தெரிவித்து உள்ளது.  அதே நேரத்தில் பிரதமரின்  ஜன்தன் யோஜனா திட்டம் காரணமாக  இந்தியாவில் 2011ம் ஆண்டு முதல் வயது வந்தவர்களின் வங்கி கணக்கு எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜன்தன் யோஜனா திட்டத்தின்படி,  கடந்த மார்ச் 31ம் தேதி (2018)  வரை ரூ.31 கோடி கூடுதல் நிதி வங்கிகளுக்கு கிடைத்துள்ளதாக வும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை விட ஆண்கள் 20 சதவீத வங்கி கணக்குகளை அதிகம் கொண்டிருந்தனர். இந்த பாலின பாகுபாடு தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக ஆதார் எண்ணை வங்கி பரிவர்த்தனைகளுக்கு கட்டாயப்படுத்தியதும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், உலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் இருப்பதாக தெரிவித்து உள்ளது.

‘ஜன்தன் யோஜனா’ திட்டம் – ஏழை மக்கள் கந்து வட்டிக்காரர் களிடமும், அடகு கடைகளிலும் கடன் வாங்கி அவதிப்படுவதைத் தடுப்பதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.  கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் எந்த வைப்புத் தொகையும் இல்லாமல் ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடும் செய்யப்படும். 6 மாதங்களுக்கு பின் ‘ஓவர் டிராப்ட்’ தொகையாக ரூ.5 ஆயிரத்தை வங்கிகள் வழங் கும். அந்தத் தொகையை முறை யாக திருப்பி செலுத்தினால் ரூ.15 ஆயிரம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.

ஏழை மக்கள் கந்து வட்டிக்காரர் களிடமும், அடகு கடைகளிலும் கடன் வாங்கி அவதிப்படுவதைத் தடுப்பதற்காக இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக் காக ரூ. 70 ஆயிரம் கோடியை ம திய அரசு, ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 79 லட்சத்து 87 ஆயிரத்து 112 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்களிடமிருந்து 991 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக பெறப்பட்டுள்ளது. இதில், கிராமப்புறத்தில் அதிகபட்ச மாக 43 லட்சத்து 35 ஆயிரம் வங்கிக் கணக்குகளும், நகர்ப்புறத் தில் 36 லட் சத்து 51 ஆயிரம் வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட் டுள்ளன. 72 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு ‘ரூபே’ ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.