டெல்லி: உலகை ஆட்டிப்படைத்துவந்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய பெருந்தொற்று, இந்தியாவில் 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள  தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 89.91 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது என்றும், தினசரி பாதிப்பு விகிதம் 0.75 சதவிகிதம் என்றும், வாரப் பாதிப்பு விகிதம் 1.01 சதவிகிதமாக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இன்று காலை 8மணியுடன் நிறைவடைந்த கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1,946 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில்,  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,968 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் 2,417 பேர் குணமடைந்து வீடு திருமியுள்ளனர்.  இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,79,485 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,923 பேர் ஆக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,19,41,43,525 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 3,76,787  டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.