24 மணிநேரத்தில் 1897: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்வு

Must read

டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை  பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில்  73 புதிய இறப்புகளுடன், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை   1,007 ஆக அதிகரித்துள்ளது.  இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்,  செயலில் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகள் 22,629 என்றும், குணப்படுத்தப்பட்ட வர்கள் எண்ணிக்கை  7,695 என்றும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளா மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 9,318 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1388 பேர் குணமாகி உள்ளனர்.  பலி எண்ணிக்கையும் 400 ஆக உயர்ந்துள்ளது.

அதையடுத்து,  குஜராத்தில்  3744  பேரக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 434 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 181 பேர் பலியாகி உள்ளனர்.

3வது இடத்தில்  தலைநகர் டெல்லி உள்ளது. அங்கு  3314 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் பலியாகி உள்ளனர்.  1078 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்,

மத்திய பிரதேசத்தில் 377 நோயாளிகள் குணமான நிலையில், இதுவரை  120 பேர் உயிரிழந்துள்ளனர்.

More articles

Latest article