தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய மொத்த பாதிப்பில் 70 சதவீதம் (1278) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ளது.

சென்னையில் 771, செங்கல்பட்டில் 316, திருவள்ளூரில் 134 மற்றும் காஞ்சிபுரத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 85, கன்னியாகுமரி 65, திருச்சி 47, திருநெல்வேலி மற்றும் மதுரையில் தலா 34 பேருக்கும், தூத்துக்குடி 31, விருதுநகர் 29, சேலம் 25, ஈரோடு 18, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூரில் தலா 16 பேருக்கும், சிவகங்கை 15, விழுப்புரம் 14, ராணிப்பேட்டை 11, தேனி 10,

கடலூர், ராமநாதபுரம் மற்றும் வேலூரில் தலா 9 பேருக்கும், திருவண்ணாமலை 8, திருவாரூர் 7, திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் பெரம்பலூரில் தலா 5 பேருக்கும்

நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேருக்கும், நாகப்பட்டினம் மற்றும் நீலகிரியில் தலா 4 பேருக்கும், அரியலூர் மற்றும் தென்காசியில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மற்றும் திருப்பத்தூரில் தலா 2 பேருக்கும்

தருமபுரி மற்றும் கரூர் ஆகிய 2 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர கத்தார் நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், ஜெர்மனி, ஈராக், தஜிகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, மேலும், டெல்லியில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இன்று மொத்தம் 25,657 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 995 ஆண்கள் 832 பெண்கள் என மொத்தம் 1,827 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

764 பேர் இன்று குணமடைந்த நிலையில் 10,033 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.